Posted: 117 months ago

Tamil > English: Novel, 96,000 words

My novel has 42 chapters with 649 pages and 96,000 words in tamil it has to be translated into english . Please let me know how much it cost to translate.

chitraselvam

Text sample:
அத்தியாயம் - ஒன்று
மார்ச் மாதம் 29-ம் தேதி ,1972 ம் ஆண்டு புதன்கிழமை , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகிற்கு ஒளியை அளித்துவிட்டு, அன்று தன் கடமையை முடித்த திருப்தியில், சுயநலமற்ற அந்த ஆதவன் ,ஆரஞ்சு நிற வர்ணத்தை அள்ளி ஆங்காங்கே தெளித்தது போல், நீலநிற வானத்தின் நடுவே அழகிய வட்டவடிவ நெருப்புகுழம்பாக, மெதுவாக மறைந்து கொண்டிருந்த அந்த மாலை ஏழு மணியளவில், எங்கள் சின்ன அத்தை சாராவின் கறுப்பு நிற பீயட் கார் ,எங்கள் தந்தையின் பெற்றோர் வீட்டு வாசலின் முன் நின்றது.
சிறிய காரில், ஐம்பது வயது மதிக்கத்தக்க உள்ள ஒரு பெரியவரும் , பார்க்க ஐந்தரை ஆடி உயரமும் , தலையின் முன்பக்கம் சற்றே வழுக்கையும் , காட்டனில் வெள்ளை வெட்டியும் , வெள்ளை சட்டையும் அணிந்திருந்த கார் ஒட்டுபவரும், சின்ன அத்தை சாராவும் ,அண்ணன் ஷானும் ,தம்பி பாட்டும் ,தங்கை ஆன ஹியும், சின்ன பாட்டி சந்திராவும் மற்றும் நானும் ,மொத்தம் ஏழு பேர் எப்படியோ அந்த சிறிய காரில் சமாளித்து கொண்டு பயணம் செய்து வந்து இறங்கினோம்.
என் தந்தையின் பெற்றோர்கள், சென்னையில் கீழ்பாக்கம் என்ற இடத்தில் வசித்து வந்தார்கள். அந்த வீட்டின் நான்கு புறமும், பெரிய மதில் சுவர் எழுப்பி, முன்புறம் ஐந்து அடி உயர்திற்குமேல், இருபுறமும் திறந்தாற்போல் பச்சை நிறத்தில் மிக பெரிய கேட்டும் , அந்த கேட்டை திறப்பதுபோல் , நேரே கார் நிறுத்தவதற்கான செட்டும், கார் ஷெட்டிலிருந்து வீட்டிற்குள் செல்லும் நுழைவாசலும், இருந்தது.கார் ஷெட்டிலிருந்து வெளியே வந்தால் , வீட்டிற்குமுன் உள்ள நுழைவாசலுக்கு செல்ல கான்க்ரீட் நடைபாதையும் ,அதன் இருபுறமும் மிக உயரமான அசோக மரங்கள் வரிசையாக நடப்பட்டு மிக அழகாக தோற்றமளித்தது . இவற்றை கடந்ததும், நாலைந்து படிகள் ஏறியதும், வீட்டின் முன்புற நுழைவாசல், அந்த நுழைவாசலின் முன்புறத்தில் வீட்டின் மேற்புற கூரையிலிருந்து கீழே தரையை தொட்டவண்ணம் தொங்கிகொண்டிருந்த மனிப்லான்ட் என்னும் செடி , வெளியிலிருந்து

Languages:

Tamil > English

Service required:
Translation

Status: Closed (No quotes can be placed anymore)

About the outsourcer:
The outsourcer information has been removed because this job posting has already been closed.

Not the right job?

Find more job requests in the job list. Touch the button below.